இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவுக்கு அதிபர் சிறிசேனா பதவி நீக்க கடிதம் அனுப்பியுள்ளார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியும், ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது. இந்த கூட்டணியில் சமீப காலமாக பிரச்சனை இருந்து வந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர், கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றதையடுத்து, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து தான் விலக போவதில்லை என ரனில் விக்கிரம சிங்கே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிபர் சிறிசேனா, பதவி நீக்க கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளார். அதில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி இலங்கை குடியரசின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post