நீதிமன்ற உத்தரவில் இருந்து தடை நீங்கிய 6 மாதத்தில் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு வந்துள்ளது, உத்தரவு நகல் தங்களுக்கு கிடைத்த உடன், அது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
இதுவரை பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி விட்டதாகவும் அவர் கூறினார். பொதுவாக, தொகுதி காலியானதிலிருந்து 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும், ஆனால் இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவில் இருந்த தடை நீங்கிய 6 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
Discussion about this post