கிரிக்கெட், கால்பந்து அளவிற்கு உலகின் பிரபலமான விளையாட்டாக திகழ்வது டென்னிஸ் விளையாட்டு. இந்த டென்னிஸ் போட்டித் தொடர்களில் மிகவும் புகழ்பெற்றதாக கருதப்படுவது விம்பிள்டன் ஓபன் தொடர் ஆகும். இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 4 முறை விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச்சை 20 வயதே ஆன ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் அபாரமாக விளையாடி பட்டத்தை கைப்பற்றினார்.
அமெரிக்கா ஓபன்:
கடந்த 2018ம் ஆண்டு முதல் அல்காரசின் திறமையை மேலும் மேலும் வளரச்செய்தார். இவர் முதலில் 2018ம் ஆண்டு முதல் சீனியர் வீரர்களுக்கான சர்வதேச போட்டிகளில் களமிறங்கத் தொடங்கினார். தன்னுடைய அசாதாரணமான ஆட்டத்தால் 2021ம் ஆண்டுக்குள் டென்னிஸ் தரவரிசையில் 100வது இடத்திற்கு முன்னேறி சென்றார்.
அதன்பின்பு குரோஷியா ஓபன், ஏடிபி பைனல்ஸ், ரியோ ஓபன் ஆகியவற்றில் பங்கேற்று அசத்தினார். மியாமி ஓபன், பார்சிலோனா ஓபன் ஆகிய தொடர்களை கைப்பற்றி அவரது திறமைகளை வெளிக்காட்டினார். தொடர்ந்து ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த அல்காரஸ் கடந்தாண்டு நடந்த புகழ்பெற்ற அமெரிக்க ஓபன் தொடரை கைப்பற்றினார். இதன் பிறகு இவரது அபாரமான ஆட்டத்தை ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமே திரும்பி பார்த்தது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை மிக இளவயதில் கைப்பற்றிய 2வது வீரர் என்ற அரிய சாதனையை அல்காரஸ் படைத்தார்.
வெற்றிக்கனியை பறித்தார் அல்காரஸ்!
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வருகின்றது. இதனை தொடர்ந்து தொடக்கத்திலேயே அல்காரசின் இரு சர்வீஸ்களை ஜோகோவிச் அவரது எளிமையான ஆட்டத்தினால் முதல் செட்டைக் கைப்பற்றினார். இதனை அடுத்து இருவருக்கும் இடையில் டைபிரேக்கரில் ஆட்டம் தொடர்ந்தது. ஆனால் மூன்றாவது செட்டில் அல்கர் வசம் வந்தது. இருப்பினும் நம்பிக்கையை விடாமல் விளையாடிய ஜோகோவிச் நான்காவது செட்டில் பதிலடிக் கொடுத்தார்.
போட்டி அடுத்தடுத்து தளத்திற்கு நகர்ந்தது. கடைசி செட்டில் ஜோகோவிச் கடும் நெருக்கடி ஏற்பட்டது. கடும் சவால்களையும் தாண்டி அல்கார்ஸ் வெற்றி மகுடத்தை சூடினார். சுமார் நான்கு மணி நேரம் மற்றும் 42 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியானது அல்காரஸ் ஆட்டத்தில் 1-6, 7-6, 8-6, 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்தார். இதன் மூலமாக முதன் முறையாக விம்பிள்டன் கோப்பையை தனதாக்கினார். ”நம்பர் ஒன்” இடத்தையும் தன்வசமாகினார். தனது 20-வது வயதிலேயே அல்காரஸ் இரண்டாவது முறையாக வென்ற கிராண்ட்ஸ்லாம் இதுவே ஆகும்.
Discussion about this post