பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகிளா காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கும் பா.ஜ.க. அரசுக்கும் எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வால் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து பல முறை கேள்வி எழுப்பியும், பிரதமர் மோடியோ அல்லது அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்தோ பதில் அளிக்காதது ஏன் என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று அவர் விமர்சித்தார்.
Discussion about this post