முதலமைச்சருக்கு கூஜா தூக்கவும், வாரிசு அமைச்சரை தாஜா செய்யவும் போட்டி போட்டுக் கொள்ளும் அமைச்சர்கள், தங்களுக்குள் ஈகோ மோதலிலேயே திரிவதால் திமுகவின் உட்கட்சி விவகாரங்கள் அரசியல் களத்தில் அவலாகிக் கிடக்கிறது. திமுக அமைச்சர்களுக்குள் நடக்கும் பூசல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
வெளித்தோற்றத்துக்கு வெள்ளையும் சொல்லையுமாய் காட்சி அளித்து திரிந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்களின் ஈகோவை வெளியிட்டுக் கொண்டுதான் திரிகிறார்கள் திமுகவின் அமைச்சர்கள் என்கிறார்கள் உள்கட்சி விவரங்களை அறிந்தவர்கள்.
அமைச்சர் கே.என்.நேரு – அமைச்சர் அன்பில் மகேஷ் – திருச்சி சிவா எம்பி என்று, முக்கோண அதிகாரப்போட்டியில் உழன்று கொண்டிருக்கிறது திருச்சி மாவட்ட திமுக. அதிலும் சமீபத்தில் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிவா வீட்டில் தாக்குதல் நடத்தியதும், பின்னர் நேரு சிவாவை சந்தித்தது நடந்தாலும் இன்னமும் நீரு பூத்த நெருப்பாகவே இருக்கிறது இந்த முட்டல் மோதல்…
மதுரையில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ தளபதி இடையே உள்குத்து அரசியல் நடைபெற்று வருகிறது. இது ஒருபக்கம் இருக்க பிடிஆரின் ஆதரவாளரான மதுரை மேயர் இந்திராணி, மூர்த்தி மற்றும் தளபதி ஆதரவு கவுன்சிலர்களை கண்டு கொள்ளவில்லை என்னும் புகார் தலைமைக்கு செல்ல, அதில் பஞ்சாயத்து செய்த அமைச்சர் நேரு, இந்திராணியை மிரட்டியது, பிடிஆருக்கும் நேருவுக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதே போன்று கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகளில் தனக்கு திருப்தியில்லை என்றும், கடத்தல்கள் அதிகமாக நடப்பதாக செய்திகள் வருவதாகவும் குறை கூறிய நிதி அமைச்சர் பி.டி.ஆருக்கு….. யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி கொடுத்ததும் இருவருடையே நிலவி வரும் ஈகோ யுத்தத்தை அம்பலப்படுத்தியது.
அமைச்சர்கள தாண்டி நிர்வாகிங்க மத்தியிலயும் உட்கட்சி பூசல் கும்மி அடிச்சிக்கிட்டு தான் இருக்குதாம். கே.என் நேருவ சேலம் மாவட்ட பொறுப்பாளரா போட்டிருக்கிறதால அங்க உள்ள நிர்வாகிகள் எல்லாம் காண்டுல இருக்காங்க.. கரூரை விட்டு கோயம்புத்தூர்ல வந்து செந்தில்பாலாஜி போடுற ஆட்டத்தால கோவை திமுக நிர்வாகிங்களும் தலைமை மேல கடுப்புல இருக்காங்க…
இந்த நிலையிலதான அமைச்சர்கள் துரைமுருகனுக்கும், எ.வ.வேலுவுக்கு இடையேயும் உள்கட்சி பஞ்சாயத்து நடக்குறதா செய்தி வெளியாகி இருக்கு…
தமிழக அரசோட பல்வேறு துறைகள் சார்பா கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுது. இந்த பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கிறதுக்காக கட்டுமானப் பொருட்களுக்கான விலையும், கட்டுமான தொழிலாளர்கள், எலக்ட்ரீஷியன், பிளம்பர், தச்சர் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான தினக்கூலியும் நிர்ணயம் செய்யப்பட்டு அந்த பட்டியலோடு கையேடு வெளியிடப்படும். கடந்த 2 வருஷமா இந்த பட்டியல வெளியிடுறதையும் ஒரு விளம்பரமாக்கி வச்சிருக்காங்க திமுக ஆட்சியில. கடந்த ஏப்ரல் மாசம் 28ஆம் தேதி அந்த பட்டியல, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு வெளியிட்டிருக்காரு… வழக்கம்போல போட்டோ பிடிச்சி அத விளம்பரமும் பண்ணிட்டாங்க… ஆனா, இந்த பட்டியல் இன்னும் பொதுமக்கள் கைக்கு வரலை… ஏன்னா, இந்த பட்டியல்ல இருந்த சில கட்டுமானப் பொருட்களோ விலைய திருத்தி கேட்டிருக்காரு அமைச்சர் துரைமுருகன். அவங்க செய்யாததால, துரைமுருகன் அந்த விலைப்பட்டியல்ல கையெழுத்து போடல… ஆனா அதையும் மீறி அமைச்சர் வேலு, துரைமுருகன் கையெழுத்து இல்லாமலேயே வெளியிட்டதால துரைமுருகன் கடுப்புல இருக்காறாம். இப்படி அமைச்சர்களோட ஈகோவால, புதிய பட்டியல் படி திட்ட மதிப்பீடு தயாரிக்க முடியாம அரசுத்துறையும், தனியார் கட்டுமான நிறுவனங்களும் முதலமைச்சர் இதுல தலையிடணும்னு காத்திருக்குதாம்.
Discussion about this post