எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் , அஇஅதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பெயரில் நூற்றாண்டு வளைவு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை கடற்கரை காமராஜர் சாலை பொதுப்பணி துறை அருகே தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது பொற்கரங்களால் கடந்த ஆகஸ்ட் 24 தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசு சார்பில் சுமார் 2 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் உருவாகி வரும் இந்த வளைவு 66 அடி அகலமும் 52 அடி உயரமும் கொண்ட இந்த வலைவு, மிக பிரம்மண்டமான முறையில் அமைக்கபட்டு வருகிறது. இதன் பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும் என்று கூறப்பட நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Discussion about this post