தசரா பண்டிகையின் போது, அமிர்தசரசில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக பஞ்சாப் அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா பண்டிகையின் போது ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைப் பார்க்க ஏராளமானோர் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், தங்களது செல்போனில் விழாவை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அமிர்தசரசில் இருந்து ஜலந்தர் நோக்கிச் சென்ற ரயில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாயினர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு பஞ்சாப் அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Discussion about this post