பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு என்று சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல் ஜூபிர் கூறி உள்ளார்.
சவுதி மன்னர் சல்மானின் ஆட்சி பற்றி கடுமையாக விமர்சித்து வந்த, அந்நாட்டின் பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி, கடந்த 2ஆம் தேதி மாயமானார். இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்ற அவர், சவுதி ஏஜெண்ட்களால் கொடூரமாக கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில், ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு என்று சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல் ஜூபிர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவரது மரணத்திற்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தான் காரணம் என்பது உண்மையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கொலையில், உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அதெல் அல் ஜூபிர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post