தாய், தந்தையை இழந்து வாடும் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாணவி சிவரஞ்சனி மற்றும் அவரது சகோதரர் ஹரிபிரசாந் ஆகியோரின் படிப்பு செலவை தமிழக அரசு ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் மாணவி சிவரஞ்சனி. இவர், கோவை அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், சிவரஞ்சனியின் தாய், தந்தை மறைவுக்கு பின்னர் சகோதரர் ஹரி பிரசாந்தை படிக்க வைக்க மாணவி சிவரஞ்சனி கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்றார். மாணவி சிவரஞ்சனி தனக்கு அரசு வேலையோ, அல்லது படிப்பிற்கு உதவியோ அரசு உதவி வழங்க வேண்டும் என ஊடகம் மூலம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
மாணவி சிவரஞ்சனியின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவி சிவரஞ்சனி, கோவை அரசு கலைக்கல்லூரியில் படிப்பை தொடரவும், சகோதரர் ஹரபிரசாந்த் தாளவாடி உண்டு, உறைவிடப்பள்ளியில் படிப்பதற்கான செலவையும் அரசே ஏற்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Discussion about this post