இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்தின் மீதான மேல்முறையீட்டு வழக்கானது விசாரணைக்கு வந்தது.
பன்னீர் தரப்பு
முதலில் வாதத்தினைத் தொடங்கிய பன்னீர் தரப்பினர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தற்போது வரை உள்ளது நீதிமன்றத்தில் தங்களுடைய வாதத்தினை முன்வைத்தனர். அதற்கு நீதிபதிகள் பதில் கேள்வி ஒன்றினை கேட்டனர். அதாவது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கபட்டுவிட்டாதா? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் மனோஜ் பாண்டியனின் தரப்பானது, சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள முடியாததால் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியது. பொதுச் செயலாளர் தேர்தல் விதிகளின்படி அறிவிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.
அதிமுக தரப்பு
பிறகு தன்னுடைய வாதத்தினை தொடங்கிய அதிமுக தரப்பின் மூத்த வழக்கறிஞர்
விஜய நாரயணன் வாதிட்டார். அவரது வாதத்தின் சாராம்சம் பின்வருமாறு உள்ளது.
ஜூலை 11ம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்டார். நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கட்சியை தேர்தலுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக தான் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தபட்டது. மேலும் கட்சியில் 95 சதவிகித உறுப்பினர்கள் பன்னீர் தரப்பிற்கு எதிராக உள்ளனர். 5 சதவிகிதம் மட்டுமே ஆதரவளிக்கின்றனர். சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் அருகில் பன்னீர் அமர்ந்து இருப்பதால் அவரால் மற்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் சட்டமன்றத்திலும் பன்னீரின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் வழக்கை குறுகிய காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் மீதான விசாரணை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பின் பதில் மனுக்கள் இருதரப்பினரும் தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
Discussion about this post