சென்னையில் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் 56 நடமாடும் மருத்துவ குழுக்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் 56 நடமாடும் மருத்துவ குழுக்களை துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு குழுவிலும் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோர் இடம்பெற்று இருப்பர். இவர்கள் சென்னை முழுவதும் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன் டெங்கு, வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். மேலும் சுகாதார குழுவினர் வீடுகளை ஆய்வு செய்து கொசுக்களை அழிக்க உள்ளனர்.
Discussion about this post