கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். கனடாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் இன்று காலை முதல் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. முதல் நிலநடுக்கம் இன்று காலை உணரப்பட்டதாகவும், இது 6.6 என்ற ரிக்டர் அளவிலும், அடுத்த நிலநடுக்கம் 6.8 ஆகவும் பதிவானதாக கூறப்படுகிறது.
அடுத்த அரை மணி நேரம் கழித்து 122 மைல் தூரத்தில் தென்மேற்குப் பகுதியில் 3வது நிலநடுக்கமும், அதே பகுதியில் 15 நிமிட இடைவெளியில் 4வது நிலநடுக்கமும் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
Discussion about this post