கேபிடிவ் ஓர்கஸ் கில்லர் வகையான திமிங்கலம் தான் கிஸ்கா. இது உலகின் தனிமையான திமிங்கலம் என அழைக்கப்படுகிறது. கனடா நாட்டில் வாழ்ந்து வந்த இந்த அறியவகையான திமிங்கலம் தற்போது இயற்கை எய்தியிருக்கிறது. மேலும் முன்பு குறிப்பிட்டதுபோல கேபிடிவ் ஓர்கஸ் கில்லர் வகையில் கிஸ்கா தான் கடைசி உயிரினமாகும். இது 1979 ஆண்டு பிறந்ததாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் வாழ்ந்து தற்போது இறந்துள்ளது. தனது இரண்டு வயதில் இருந்து கனடாவின் மரைன்லேண்ட் கடல் பகுதியில் தனிமையில் இருந்து வந்துள்ளது. அந்நாட்டின் விலங்கு நலவாரியம் கிஸ்கா இறந்துபோனதற்கு பாக்டீரியத் தொற்றுதான் காரணம் என்று சொல்கிறது.
Discussion about this post