இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாள் தற்போது நடக்கிறது. உஸ்மான் கவாஜாவும், கேமரூன் க்ரீனும் நேற்றிலிருந்து அதிரடியாக விளையாடி வருகிறார்கள். நேற்று கவாஜா சதம் அடித்திருந்தார். தற்போது அவர் 162 ரன்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறார். மேலும் அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வரும் கேமரூன் க்ரீன் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய முதல் சத்கத்தினை அடித்தார். இருவரும் இணைந்து இந்திய அணியின் பவுலிங்கைத் திணறடித்து வந்தார்கள். தற்போது கேமரூன் க்ரீன் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் ஆனார். அவர் 114 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.
இன்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் ஆஸ்திரேலியாவில் மரணம் அடைந்துள்ளார். அதனை ஒட்டி ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கருப்புப் பட்டை ஒன்றினை அணிந்து விளையாடி வருகிறார்கள்.
Discussion about this post