சென்னை கொருக்குபேட்டையில் நடைபெற்ற விழாவில், தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காமல் சால்வை வாங்குவதில் ஆர்வம் காட்டிய வாரிசு அமைச்சரின் செய்கையால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். கொருக்குப்பேட்டையில் மேம்பாலம் பணி துவக்க விழாவில் பங்கேற்பதற்காக, வாரிசு அமைச்சர் வருகை புரிந்தார். அப்போது, கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களை, போலீசார் குண்டர்களைப் போன்று இழுத்து தள்ளி அராஜகத்தில் ஈடுபட்டனர். பின்னர் மேடைக்கு வந்த வாரிசு அமைச்சர், தேசிய கீதம் பாடுவது கூட தெரியாமல், சால்வை வாங்குவதில் ஆர்வம் காட்டியதால், விழாவிற்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Discussion about this post