போக்குவரத்து துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பழுதடைந்த பேருந்துகளுக்கான புதிய உபகரணங்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் 30 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் பற்றாக்குறை அதிக அளவில் இருக்கக்கூடிய நிலையில், நேரடியாக பணியாளர்களை நியமிக்காமல், தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை நியமிக்க விடியா அரசு முயற்சிகளை எடுத்து வருவதற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போக்குவரத்து துறையில் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் சென்னை மாநகரில் மட்டும் சுமார் 30 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளில் பழுதடையும் உபகரணங்களுக்கு புதிய உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படாததால் ஆபத்தான நிலையிலேயே அவை இயக்கப்படுகின்றன. இதனால் மாநகர பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நடுவழிலேயே நிற்பதும், விபத்துகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
Discussion about this post