மதசார்பற்ற கூட்டணி என்று சொல்லிக்கொள்ளும் திமுக, உண்மையில் சாதி சார்பற்ற கூட்டணி என்று நிருபிக்க முடியுமா என கழக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளையொட்டி சென்னை புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் தலைமையில் கந்தன்சாவடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் கழக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், சொன்னதை எதையுமே செய்யாதவர் மற்றும் 520 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதவர் ஸ்டாலின் என விமர்சித்தார்.
Discussion about this post