மூன்று மாநிலங்களில் பொதுத்தேர்தலானது கடந்த மாதம் நடைபெற்றது. முன்னதாக திரிபுராவில் மட்டும் பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போது அந்த மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை திரிபுராவிலும் நாகாலாந்திலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட அந்த மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியைத் தக்க வைக்கிறது. திரிபுராவில் 38 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 48 தொகுதிகளிலும் அதிகாரப்பூர்வமாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேகாலயாவில் மட்டும் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. அங்கே என்பிபி கட்சியானது முன்னிலையில் உள்ளது. அக்கட்சி 20 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே முன் சொன்ன திரிபுராவிலும் நாகாலாந்திலும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
Discussion about this post