News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

கிளிகளை வீட்டில் வளர்க்கலாமா?.. ஓசியில் கிளி வாங்கி வளர்த்து லட்சங்களில் அபராதம் செலுத்திய ரோபோ ஷங்கர்!

Web team by Web team
February 21, 2023
in இந்தியா, உலகம், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கிளிகளை வீட்டில் வளர்க்கலாமா?.. ஓசியில் கிளி வாங்கி வளர்த்து லட்சங்களில் அபராதம் செலுத்திய ரோபோ ஷங்கர்!
Share on FacebookShare on Twitter

நடிகர் ரோபோ ஷங்கர் தன்னுடைய வீட்டில் கிளிகள் வளர்த்ததால் வனத்துறை அவருக்கு 2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனியார் வலையொளி(you tube) ஒன்றிற்காக ரோபோ ஷங்கரின் வீட்டிற்கு ஹோம் டூர் சென்ற புகழ் மற்றும் பாலா இருவரும் அவரது வீட்டை முழுமையாக காணொளி எடுத்தனர். அப்போது ரோபோ ஷங்கர் தனக்கு அன்பளிப்பாய் வந்த பச்சைக்கிளிகளை காண்பித்திருக்கிறார். மேலும் அவற்றை அவர் கூண்டிற்குள் வைத்து வளர்த்திருக்கிறார். இந்த காணொளியைக் கண்ட வனத்துறையினர்  அவர் வளர்க்கும் பெரிய பச்சைக்கிளிகள் இந்திய வன உயிரி சட்டம் 1948ன் படி அழிவுறும் இந்திய உயிரினங்களின் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது என்று தெரிவித்து அவற்றை வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வகையான கிளிகளை வளர்ப்பதும், இனப்பெருக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம் என்கிற வகையிலும் வனத்துறையிடம் ஒப்புதல் பெறாமல் இருந்ததாலும் ரோபோ ஷங்கருக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த செய்தி ஒருபுறம் இருக்க, நமது வீடுகளில் எந்தெந்த பறவைகளை வளர்ப்புப் பிராணியாக வளர்க்கலாம், வளர்க்கக்கூடாது என்று தற்போது பார்ப்போம்.

இந்திய வனவிலங்கு மற்றும் வன உயிரி பாதுகாப்புச் சட்டப்படி இந்திய பறவையினங்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. ஆனால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பறவையினங்களை வளர்க்கலாம். குறிப்பாக budgerigar எனப்படும் காதற்கிளி, cackatoo எனப்படும் கொண்டைக்கிளி போன்ற வெளிநாட்டு கிளிவகைகளை வளர்க்கலாம். அவற்றையுமே இந்திய அரசிடம் ஒப்புதல் பெற்றப் பிறகே வளர்க்கலாம். ஆனால் இந்தியக் கிளிவகைகளை வளர்ப்பது தவறு என்று சொல்லப்படுகிறது. மேலும் தேசிய பறவைகள் என்ற வகைமைக்குள் வரும் மயில் போன்ற பறவைகளை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய இன சிட்டுக்குருவிகளைக் கூட வளர்க்கக்கூடாது என்கிறார்கள். உலக அளவில் கூட  wild life எனப்படும்  வனவியல் சார்ந்து இருக்கக்கூடிய உயிரினங்களை மக்கள் வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பது தவறு. காரணம் அதற்கான வாழ்வாதாரமும் சூழலும் காட்டிற்குள் தான் இருக்கிறது என்பது வனவியலாளர்களின் கூற்று. அப்படியென்றால் எந்தப் பறவைகளையும் இந்தியாவில் வளர்க்கமுடியாதா என்று கேட்டால்,  இந்தியாவைப் பொறுத்தவரை புறாக்களை வீட்டில் வளர்ப்புப் பிராணியாக வளர்க்கலாம் என்று சட்டம் சொல்கிறது.

Tags: bird petsindian petslegal bird petsRobo Shankar
Previous Post

விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சினைக்கு உண்மையான காரணம் யார்? – கிஷோர் கே சுவாமி!

Next Post

என் வெற்றியின் தூண் எனது அம்மாதான்! – தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை சந்தியா ரங்கநாதன்!

Related Posts

'ஜெயில்' திரைப்படம் எப்படி இருக்கிறது?
TopNews

'ஜெயில்' திரைப்படம் எப்படி இருக்கிறது?

December 9, 2021
Next Post
என் வெற்றியின் தூண் எனது அம்மாதான்! – தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை சந்தியா ரங்கநாதன்!

என் வெற்றியின் தூண் எனது அம்மாதான்! - தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை சந்தியா ரங்கநாதன்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version