துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர், 7.4 ரிக்டர் மற்றும் 5.5 ரிக்டர் ஆகிய அளவுகளில் மூன்றுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் 6000த்திற்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து மக்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் 11 நாட்களுக்கு பிறகு கூட சிலரைக் காப்பாற்றி வருகிறார்கள். இருந்தும் துருக்கியில் இறப்பு எண்ணிக்கையானது 45000 தாண்டி வருகிறது. இடிபாடுகளில் சிக்கியிருக்கும் சிலர் பசியினாலும் பனியினாலும் பிணியினாலும் இறந்துகொண்டு வருகின்றனர். இது உலக அளவில் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post