சபரிமலைக்கு சென்ற ஆந்திராவை சேர்ந்த இரண்டு பெண்கள், பக்தர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் ஆந்திரவை சேர்ந்த இரண்டு பெண்கள் சென்றனர், இவர்கள் சன்னிதானத்தில் நுழைய முயன்ற போது அங்குள்ள பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்று கூறி அவர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள், பெண்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறினர். அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாததால், இரண்டு பேரையும் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்ற போது அங்குள்ள பக்தர்கள் பெண்களை தாக்கியுள்ளனர். இதனால் படுகாமடைந்த பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கேரளாவின் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post