தன்னுடைய மகளின் பெயரை வேறு யாரும் வைக்கக்கூடாது என்று வடகொரிய அதிபர் கிம் ஜொங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அதே பெயரை வேறு யாராவது வைத்திருந்தால் அந்தப் பெயரை ஒருவாரத்தில் மாற்றும்படி உத்தரவு இட்டுள்ளார். அவரின் மகளின் பெயர் ஜூ ஏ ஆகும். இந்த நடவடிக்கை அந்நாட்டு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வடகொரிய அதிபர் சர்ச்சைக்குரியவர்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆகவே ஜூ ஏ பெயரைக் கொண்ட மக்கள் பீதியில் உள்ளனர்.
Discussion about this post