சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகளை நடத்துவது வழக்கம். அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, லயோலா கல்லூரி மாணவர்களின் “இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள்” என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பான ஆட்சியை வழங்கியதாக 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை வழங்குவதாக, வெறும் 42 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோல், விடியா ஆட்சியில், இளைஞர்களின் போதைப் பொருள் பழக்கம், வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், இதை திமுக அரசு கட்டுப்படுத்தும் விதம் குறித்து, 80 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வெறும் 11 சதவீதம் பேர் மட்டுமே நன்று என கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோல், ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதை ஈரோடு கிழக்கு தொகுதி மக்களில், 51 சதவீதம் பேர் விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும், என்று 38 சதவீதம் பேரும், நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று, 30 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Discussion about this post