நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நேற்றைய உரிமைக்குரல் விவாத நிகழ்ச்சியானது மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. விவாதத்தின் பேசுபொருளாக ஈரோட்டில் எடுபடுமா ஸ்டாலின் சிக்கன் ஃபார்முலா? என்ற கருப்பொருளில் விவாதமானது நீண்டது. ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு தங்ககாசு முதல் கோழிக்கறி வரை விநியோகம் செய்யும் திமுகவைக் கண்டிக்கும் வகையில் விவாதம் அனல்பறக்க நடைபெற்றது. இவ்விவாத மேடையில் கலந்துகொண்டு பேசிய அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி தன் பக்க கருத்துக்களை பின்வருமாறு பேசியிருக்கிறார்.
கிஷோர் கே சாமி :
1952ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் திண்டிவனத்தில் காங்கிரஸை சேர்ந்த ராம்நாத் கோயிங்கா போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர்கள் திருக்குறள் முனுசாமி, ஜெயராமன் போன்றவர்கள் ஆவர். அந்தத் தேர்தலில் ஹெலிகாப்டரில் இருந்து பணத்தை காங்கிரஸ்காரர்கள் வீசினார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது இந்தியாவில் முதன்முதலில் வாக்கிற்காக காசு கொடுத்த கட்சி காங்கிரஸ். அதனுடைய நீட்சிதான் தற்போது சிக்கன் வரை வளர்ந்துள்ளது. இந்த விசயத்தில் கைதேர்ந்தவர்களாக இருப்பவர்கள் திமுகவினர். தேசிய அளவில் காங்கிரஸ் தவறான முன்னுதாரணமாக இருக்கிறதோ அதுபோல தமிழக அளவில் திமுகவினை தவறான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன் இறுதி நாட்களை எண்ணுவதாக சொல்கிறார். தான் மடிந்தால் ஈரோடு கிழக்கில்தான் மடிவேன் எண்கிறார். இதனை நாம் எப்படி எடுத்துக்கொள்ள? வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் 1984ல் கருணாநிதி எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் மீண்டும் வரமாட்டார் என்று சொல்லி வாக்கு கேட்டதுதான் நியாபகத்திற்கு வருகிறது. அதாவது எதிர்கட்சித் தலைவராக இருந்தால் தலைவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சொல்லு வாக்கு கேட்பது, தன்னுடைய தொகுதியாக இருந்தால் தான் சாகப்போகிறேன் என்று வாக்கு கேட்பது. இதைத் தான் இந்த இரு கட்சியினரும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது மிகவும் அவலமான விசயம். தனிப்பட்ட இழப்புகளைக் கடந்து இவர்கள் இந்த மாதிரியான விடயங்களில் ஈடுபடக்கூடாது.
மேலும் செந்தில் பாலாஜியை களமிறக்கியதை இளங்கோவன் பெருமையாக சொல்கிறார். செந்தில் பாலாஜியைப் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு தகவலை நான் சொல்கிறேன். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் களம் இறங்கும்போது அவருக்காக நான் பணி செய்திருக்கிறேன். களத்தில் இருந்த சாட்சியாக செந்தில்பாலாஜி என்ன செய்தார் என்பதை சொல்கிறேன். இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து அந்த இடைத்தேர்தலில் வெல்லும் வியூகம் அமைத்துக் கொடுத்தவர் செந்தில் பாலாஜிதான். இப்படிப்பட்ட வரலாறுக்கு சொந்தக்காரர் தான் செந்தில்பாலாஜி. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கொலுசு கொடுத்தார். கொலுசு பாலாஜி என்றே அன்றைக்கு அழைக்கப்பட்டு வந்தார். அதுவுமே போலி கொலுசு என்று மக்கள் கேள்விகேட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த மனநிலை கருணாநிதியின் மனநிலை. தேர்தலில் வென்றால் தன்னுடைய சாதனை என்றும் தோற்றால் மக்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றும் கருத்து சொல்வார் அவர். திமுகவினர் மக்களைத் தங்களின் தேவைக்கானவர்களாக பார்க்கின்றனர். இவ்வாறு உரிமைக்குரல் விவாத நிகழ்வில் தன்னுடைய வாதத்தினை முன் வைத்தார் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி.
Discussion about this post