தமிழில், அபூர்வ ராகங்கள், அலைபாயுதே, தவசி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த ஜெயசுதாவுக்கு 60 வயதாகும் நிலையில், மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை ஜெயசுதா, திருமணம் செய்துகொண்டதாக ஊடகங்களில் செய்தி பரவியது. இந்த நிலையில், 3வது திருமணம் பற்றி வெளியான தகவல்களுக்கு ஜெயசுதா மறுப்பு தெரிவித்துள்ளார். தான் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் அந்த நபர், இயக்குநர் என்றும், தன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்காக தன்னுடன் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
Discussion about this post