வருடாவருடம் பிப்ரவரி 13 ஆம் தேதியினை தேசிய மகளிர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணம் இன்று விடுதலைப் போராட்ட தியாகி மற்றும் இந்தியாவின் நைட்டிங்கேள் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடுவின் பிறந்தநாள். சரோஜினி நாயுடு 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். கவிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியான சரோஜினி நாயுடு அவர்கள் மிகுந்த கல்வி வளம் பெற்றவர். இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலைக்கழகத்திலும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றவர். இவர்தான் இந்தியாவின் முதல் பெண் கவர்னராக உத்திரபிரதேசத்தில் பணி செய்தார். இவரது அரசியல் மற்றும் சுதந்திர போராட்ட தியாகங்கள் போன்றவற்றினை கெளரவிக்கும் பொருட்டு இவரது பிறந்தநாளை 1975லிருந்து இந்தியாவின் தேசிய மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
Discussion about this post