மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று வானொலி. தற்போது அதன் பயன்பாடு குறைந்த வண்ணம் உள்ளது. டிவி, ஸ்மார்ட் போன்களின் வருகையினால் வானொலியைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு பெரிதாக தெரியவில்லை. இன்றைக்கும் விசைத்தறித் தொழிலாளர்களின் வீடுகளில் வானொலி பயன்பாடு இருந்து வருகிறது. முதலில் 2011ல் நவம்பர் 3 ஆம் தேதியினை உலக வானொலி நாளாக யுனஸ்கோ அறிவித்திருந்தது. வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களிடையே நல் கூட்டமைப்பை ஏற்படுத்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இத்தாலியில் பீசா பல்கலைகழகத்தில் உலக வானொலி நாள் பிப்ரவரி 13 2012ல் கொண்டாடப்பட்டது. பிறகு ஓவ்வொரு ஆண்டும் இதே நாளில் கொண்டாடப்பட்டது. 2023ஆம் ஆண்டிற்கான வானொலி தினத்தின் கருப்பொருளாக வானொலி மற்றும் அமைதி என்ற விதத்தில் கொண்டாடப்பட உள்ளது. இது உலக அமைதியினை நிலைநாட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
Discussion about this post