சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரும், அவரது மனைவி வாசுகி ஆகியோரும் சென்னையில் உள்ள தங்களது ரத்தனா ஸ்டோர்ஸ் நிறுவன வளர்சிக்காக, தூத்துக்குடியிலுள்ள ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 60 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளனர். அதற்கு ஈடாக உறுதிமொழிப் பத்திரம் மற்றும் சென்னையில் உள்ள தங்களது வீட்டுப்பத்திரம் ஆகியவற்றை அடமானமாக கொடுத்துள்ளனர். இதற்கிடையில் கடன் தொகையை திருப்பிக் கேட்ட பைனான்ஸ் நிறுவனத்தினரை சிவசங்கர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜம் பைனான்ஸ் கம்பெனி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரை தூத்துக்குடி அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Discussion about this post