டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால், உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் அரை இறுதியில் மோதினார்.
இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை எளிதாக வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி வெறும் 30 நிமிடங்களே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
இறுதி போட்டியில் சாய்னா, உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தாய் சூ யிங் உடன் விளையாட இருக்கிறார்.
Discussion about this post