தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித், கிருத்திகா பட்டேல் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதையடுத்து கிருத்திகாவின் பெற்றோர், வினித்தை தாக்கி விட்டு கிருத்திகாவை கடத்திச் சென்றதாகவும் மனைவியை , மீட்டு தரக் கோரி காவல் நிலையத்தில் வினித் புகார் அளிதார். புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி வினித் மனு தாக்கல் செய்ததார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும். கிருத்திகாவை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்கு மூலம் பெற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர், மேலும் பெண்ணின் பாதுகாப்பு முக்கியம் என்றும் கிருத்திகாவை பார்க்க பெற்றோருக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து தென்காசி அடுத்த நன்னகரம் ஒன் ஸ்டாப் காப்பகத்தில் கிருத்திகாவை, போலீசார் ஒப்படைத்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Discussion about this post