நாகப்பட்டினத்தில் பெய்த கன மழையால் பாதிக்கபட்ட நெற்பயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என்றும், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் அரசு அறிவித்துள்ள ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் என்பது ஏக்கர் கணக்கில் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும் அறுவடை இயந்திரங்களுக்கு வேளாண் பொறியியல் துறையில் தட்டுப்பாடு உள்ள நிலையில், அரசே முழு மானியத்தையும் ஏற்று விலை இன்றி அறுவடை செய்து தர வேண்டும் என்றும், உளுந்து மற்றும் பச்சைப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 3ஆயிரம் ரூபாய் என்பது மிகவும் குறைவான தொகை என்றும், எனவே நிவாரணத்தை உயர்த்தி தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post