ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சூரிய மின்சக்தி ஒளியியுடன் குளம் நிரப்பும் திட்டத்தை, தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
முருங்கத்தொழுவு மக்கள் நீண்ட காலமாக குடிநீர், பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஒலக்காடு பகுதியில் உள்ள கீழ்பவானி கால்வாயில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீரை குழாய் அமைத்து அதன் மூலம் முருங்கத்தொழுவு குளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்ட இத்திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருபபண்ணன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மிச்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதாக கூறினார். கடந்த ஒருவார காலமாக ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட புயலால் மின்சாரம் வரும் பாதையில் ஏற்பட்ட சிக்கல் தற்போது சீரடைந்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Discussion about this post