2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி மத்திய அரசின் 78 துறைகளில் 9.8 லட்சம் காலியிடங்கள் உள்ளன. அதிலும் இரயில்வே துறையில் அதிகமான இடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 2.93 லட்சம் கோடி காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக மத்திய பாதுகாப்புத் துறையில் 2.64 லட்சம் காலிப்பணியிடங்களும், உள்துறையில் 1.43 லட்சம் காலிப்பணியிடங்களும் உள்ளன. அஞ்சல்துறையில் 90,050 காலிப்பணியிடங்களும், வருவாய்துறையில் 80,243 காலிப் பணியிடங்களும், கணக்குத் தணிக்கைத் துறையில் 25,934 பணியிடங்களும் உள்ளன. மேலும் அணுசக்தி துறையில் 9,460 பணியிடங்களும் காலியாக உள்ளன. இன்னும் சில துறைகளைக் கணக்கில் கொண்டால் ஒட்டுமொத்தமாக 9,79,327 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் நிரப்ப உள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ரோஜ்கர் மேளாத் திட்டத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்பினை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். மேலும் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இபிசி போன்ற இடஒதுக்கீடுகளின் படி நிரப்ப உள்ளோம் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Discussion about this post