அதானி குழும முறைகேடுகள் குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையால் அந்த குழுமத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில் அதிபர் அதானியின் சொத்து மதிப்பு கணிசமாக சரிந்துவிட்டது. அவருக்கு மத்திய அரசு உதவியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும், பிரதமர் விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளும் கடந்த வாரம் முடங்கியது. இந்நிலையில்,வாரத்தின் முதல்நாளிலேயே மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள், விதி 267ன் கீழ் விவாதம் நடத்தகோரி நோட்டிஸ் கொடுத்தன. அதை ஏற்க அவைத்தலைவர் ஜெக்தீப் தங்கர் மறுத்ததால் அவையில் அமளி நிலவியது. இதனால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் இதேபோல அமளி நிலவியதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post