இந்திய அரசானது சீனா மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த 138 சூதாட்டச் செயலிகளைத் தடை செய்துள்ளது. இதற்கு காரணம் இந்தச் செயலிகள் மூலம் கடன் ஏறி அதனைக் கட்டமுடியாமல் இதனை விளையாடுவோர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனால் மனித உயிர்களுக்கு ஆபத்தாக இருப்பதாலும், அவர்களைக் காப்பது அரசின் கடமையென்பதாலும் இந்த சூதாட்டச் செயலிகளை முடக்கியுள்ளனர். மேலும் இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்துஅல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இத்தகைய செயலிகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியிருந்தது. இதனை செயல்படுத்தும் விதமாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சீனா மற்றும் பல அயல்நாடுகளினால் உருவாக்கப்பட்ட 232 செயலிகளை முடக்கியது. இவற்றில் கிட்டத்தட்ட 138 செயலிகள் சூதாட்டத்தினை மையமாகக் கொண்டு இயங்கக்கூடியது. அவற்றில் 94 செயலிகள் அங்கீகரிக்கப்படாதவை. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் முந்நூறூக்கும் மேற்பட்ட சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.
Discussion about this post