நாட்டில் மாசடைந்து வரும் நதிகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளதா? எனவும் மாசடைந்த நதிகளை தூய்மைப்படுத்த ஏதெனும் திட்டம் உள்ளதா? எனவும் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், அனைத்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து நதிகளில் ஏற்பட்டுள்ள நீர் மாசுபாடு தொடர்பாக பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்தார். அந்த ஆய்வில், சென்னையில் உள்ள கூவம் ஆறுதான் நாட்டிலேயே அதிக மாசடைந்த நதி என அவர் தெரிவித்தார். கூவத்தை தொடர்ந்து சேலத்தில் உள்ள திருமணிமுத்தாறு மாசடைந்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post