சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
டீசரின் துவக்கத்திலேயே இவன் ஒரு தீய கார்ப்பரேட் ராட்சதன் என்ற பொருளை கொண்ட கார்ப்பரேட் மான்ஸ்டர் என்ற வார்த்தை வரும் இடத்தில் கலாநிதி மாறனின் பெயர் காட்டப்படுகிறது.
இது எதேச்சையாக அமைந்ததா? திட்டமிட்டு அமைந்ததா? என்று தயாரிப்பு குழுவிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அதேபோன்று உங்க ஊர் தலைவன தேடிப்பிடிங்க என்று ஒரு வசனத்தை நடிகர் விஜய் பேசியுள்ளார்.
இது மறைமுகமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது போல் உள்ளதாக ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர். மேலும் டீசரின் துவக்கத்தில் ஒலிக்கும் வரலட்சுமியின் குரல் பெரும்பாலானோரை கவரவில்லை என்றும் விஜய் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் இடம்பெற்ற ஒரு பகுதியை அப்படியே இதில் பயன்படுத்தி இருப்பதும் ரசிகர்களால் எளிதில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் சன் தொலைக்காட்சி அலுவலகத்தின் நுழைவாயிலையும் ஒரு காட்சியில் இடம்பெற செய்து விட்டார்கள், செலவை மிச்சம் செய்ய இப்படி ஒரு ஏற்பாடா என்றும் விஜய் ரசிகர்கள் கேலி பேசுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்களால் எதிர்பார்ப்பில் இருந்த அவரது ரசிகர்கள் இந்த டீசரை பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விஜயின் சர்கார் படத்தின் டீசர் அவரது ரசிகர்களாலேயே ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக குற்றஞ்சாட்டும் வகையில் டீசரில் வசனங்கள் இருப்பதாகவும் ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.
Discussion about this post