மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணியளவில் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை வாசித்தார். இன்றும் அதன் தொடர்ச்சி நடைபெற உள்ளது. அவர் வாசித்ததையொட்டி மக்களின் வாங்கும் பொருட்களில் சிலவைகளின் விலை அதிகரிக்கவும், சிலவற்றின் பொருட்கள் குறையவும் வாய்ப்புள்ளது.
விலை உயரும் பொருட்கள் பின்வருமாறு உள்ளன.
* தங்கம், பிளாட்டினம், வெள்ளி நகைகள் மற்றும் கவரிங் நகைகள்
* சிகரெட்
* இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள்
* மின்சார சமையலறை புகைப்போக்கி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்
* விளையாட்டு பொம்மைகள்
விலை குறைய வாய்ப்புள்ள பொருட்கள் பின்வருமாறு உள்ளன.
* இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்கள்
* இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தொலைக்காட்சிகள்
* லித்தியத்தினால் ஆன அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள்
* செயற்கை வைரம்
* இறால் தீவனம்
Discussion about this post