புதுச்சேரியில் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், ஆரோவில் சர்வதேச நகரத்தை சுற்றிப் பார்த்தனர். மூன்று பேருந்துகளில் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். ஆரோவில் வந்த அவர்களை அதன் செயலாளர் ஜெயந்திரவி மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். முதலில் ஆரோவில் விசிட்டர் சென்டரில், ஆரோவில் தொடங்கப்பட்ட வரலாறு, அதன் நோக்கம், ஆரோவில்லில் வசித்து வரும் வெளிநாட்டினர், கலாச்சார பரிமாற்றம் ஆகியவை குறித்து தெரிந்து கொண்டனர். பின்னர் தியான கூடத்திற்கு சென்று அங்கு சிறிது நேரம் தியானத்திலும் ஈடுபட்டனர். பின்னர் பாரம்பரிய கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புதுச்சேரி திரும்பினர்.
Discussion about this post