இஸ்ரேல் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகத்தை குஜராத்தை சேர்ந்த அதானி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்றனர். ஹைஃபா துறைமுக ஒப்பந்தமானது முக்கிய மைல்கல் ஆகும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அதானி, இந்த ஒப்பந்தம் ஹைஃபா நகரத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என குறிப்பிட்டார். ஹைஃபா துறைமுகமானது சரக்கு கப்பல்களை கையாள்வதில் அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்திற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதானி குழுமத்தின் பங்கு மதிப்பும் சரிவடைந்த நிலையில், இஸ்ரேலில் அந்நிறுவனம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், புதிய துறைமுக டெண்டரை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post