சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டில் சொத்து வரி வசூல் ஆயிரத்து 500 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரி உயர்த்தப்பட்டதால், கடந்த 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை 7 லட்சம் பேரிடம் இருந்து ஆயிரத்து 213 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், சுமார் 6 லட்சம் பேர் இதுவரை சொத்து வரி செலுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 31ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாவிட்டால், உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பின்னர் கட்டத்திற்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பொருட்களை ஜப்தி செய்வதுடன், மாநகராட்சி இணையத்திலும் பெயர்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடியா திமுக அரசின் சொத்து வரி உயர்வால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சியின் இந்த எச்சரிக்கை, வணிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post