சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள தனியார் விடுதியில், நாளை வரை நடைபெறும் இந்த கருத்தரங்கை, இந்தோ ஐரோப்பிய ஆர்த்ரோஸ்கோபி, ஆர்த்ரோ பிளாஸ்டிரி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங்கில், பிரான்ஸ் நாட்டின் பிரபல முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பிலிப் ஆண்ட்ரூ உட்பட, 350-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றுள்ளதாக, அந்த அறக்கட்டளையின், இந்தியாவுக்கான தலைவரும் மருத்துவ பேராசிரியருமான ஆறுமுகம் தெரிவித்தார். மேலும், மருத்துவத் துறையில் அடுத்து வரக்கூடிய புதிய தொழில்நுட்ப முறைகள் குறித்தும், அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும், இந்த கருத்தரங்கில் பேராசிரியர் பிலிப் ஆண்ட்ரூ ஆலோசனைகளை வழங்கியதாக, பேராசிரியர் ஆறுமுகம் தெரிவித்தார்.
Discussion about this post