தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அருணாச்சலபுரம் கிராமம் உள்ளது. இங்கிருக்கும் விவசாயிகள் பல ஏக்கர் அளவிற்கு மக்காச்சோளத்தை பயிரிட்டுள்ளனர். மக்காச் சோளம் பயிருக்கு ஓரளவு நீர் இருந்தாலே போதும் செழிப்பாக வளர்ந்துவிடும்.
இறவைப் பயிராக பயிரிடப்பட்ட மக்காச்சோளம் அறுவடை பணி அப்பகுதியில் தீவிரமடைந்துள்ளது. கிணற்று நீர் பாசனத்தில் பயிரிடப்பட்டு உள்ளதால் தற்போது பூச்சி தொற்று எதுவும் இல்லை என்பதால் விளைச்சல் அதிகம்.
ஆனால் மக்கச்சோளத்திற்கான விலைதான் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஒரு குவிண்டால் மக்காச் சோளத்தின் விலை 2000 ரூபாய். ஆனால் மக்காச் சோளத்திற்கு உரம் போடுதல், நீர்பாசன வசதி ஏற்படுத்தவது, பூச்சி தொல்லைகளை கட்டுப்படுத்துவது, நிலத்தில் வேலை செய்யும் உழைப்பாளர்களுக்கு பணம் என எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் முதலீடு செய்த பணம் கூட வந்து சேராது.மக்காச்சோளத்தை அரசு கொள்முதல் செய்வதில்லை, வியாபாரிகள் தான் கொள்முதல் செய்கின்றனர். அதனால் அவர்கள் நிர்ணயம் செய்யவதுதான் இறுதி விலை. வியாபாரிகள் அதை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் போது பல மடங்கு லாபத்தில் விற்கின்றனர். ஆனால் பயிரிட்ட விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மக்காச்சோள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, அரசே முன்வந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும்,ஒரு குவிண்டாலுக்கு 3000 ரூபாய் கொடுத்தால்தான் கட்டுபிடியாகும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். விடியா ஆட்சியில் விவசாயிகள் படாதபாடு பட்டு கொண்டிருக்கின்றனர். மக்காச்சோள விவசாயிகளின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Discussion about this post