தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்கள் நோய் போல பரவுவதாகவும், அதன் தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். குறிப்பிட்ட தேதிக்குள் இத்தனை சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பஞ்சாயத்துகளுக்கு உத்தரவிடலாம் என யோசனை தெரிவித்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தியது தொடர்பாக பிப்ரவரி 14ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Discussion about this post