இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் ஏற்கனவே ஆண்களுக்கான ஐபிஎல் போட்டிகளானது சக்கைப் போடு போட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் போர்டானது பெண்களுக்கானஐபிஎல் போட்டிகளை நடத்து வதற்கு ஆயத்தமாகியுள்ளது. இதற்காக பெண்களுக்கான ஐபிஎல் அணிகளின் ஏலமானது சமீபத்தில் நடந்தது.
இதனையொட்டி பிசிசிஐ-யால் புதிதாக 4 ஆயிரத்து 670 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட ஐந்து women’s premier league அணிகளின் உரிமையாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அகமதாபாத் அணியை, அதானி ஸ்போர்ட்ஸ் லைன் ஷெல்லிங், அதிக விலையாக ஆயிரத்து 289 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து IPL அணியின் உரிமையாளர்களான மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கேப்ரி க்ளோபல் நிறுவனங்கள் மற்ற அணிகளை வாங்கியுள்ளன.
இதன் மூலம், ஆண்கள் IPL அணிகளை விட, பெண்கள் IPL அணிகள் அதிகளவுக்கு விற்பனை ஆன பெருமையை பெற்றுள்ளதாக BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
Discussion about this post