கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா தலைமையில், மொழிபோர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது சென்னை உயர்நீதி மன்றம் மொழிபோர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்க தடை விதித்த நிலையில், அதை தமிழ் மொழி காவலர் என்ற பெயரில் மொழிபோர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கி உத்தரவிட்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என பெருமிதம் தெரிவித்தார். ஸ்டாலினின் தந்தை கருணாநிதி மொழிபோர் தியாகிகளை மதித்தாரா என கேள்வி எழுப்பிய அவர், பாளையம்கோட்டை சிறையில் பாம்பும், பல்லியும் வந்ததாக தமது புத்தகத்தில் கருணாநிதி பொய்யாக எழுதியுள்ளார் என குற்றம்சாட்டினார்.
Discussion about this post