நாட்டின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் கண்கவர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி டெல்லி வந்துள்ளார். அவருக்கு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது.குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் , வெளியுறவு துறை அமைச்சர் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் எல்-சிசி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில் நுட்பம். கலாசாரம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் ஒலிபரப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எகிப்து அதிபர் எல்-சிசி மற்றும் அவரது குழுவை வரவேற்பதாகவும். நாளை குடியரசு தினத்தில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார் என்றும் கூறினார்.
Discussion about this post