காசநோயானது மனிதனை முற்றிலுமாக உருக்கக்கூடிய வகையில் இருக்கும் ஒன்றாகும். இதனைக் கட்டுப்படுத்த இந்திய அரசு தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தினை 1962ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு 1990லிருந்து மாநிலத்தில் காசநோய் பரவலைக் கட்டுபடுத்தி வருகிறது. இந்நோய் மனிதர்களுக்கு உயிர்கொல்லி நோயாகவே இருந்து வருகிறது. இந்நோயின் காரணமாக இருமல், சளி போன்றவை அதிக அளவில் பரவி உடலை சிதைக்கிறது.
இந்நிலையில் இந்நோயின் அறிகுறிகளைக் கண்டறிய எலிகளால் முடியும் என்பதை தான்சானியாவில் உள்ள பெல்ஜிய விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். எலிகளுக்கு பொதுவாக மோப்ப சக்தியானது அதிகம். முதற்கட்ட சோதனையின்படி எலிகள் 95% காசநோய் அறிகுறிகளைக் கண்டறிவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் எலிகள் எச்.ஐ.வி தொற்றுக்களையும் கண்டறிவதாக தெரிகிறது.
Discussion about this post