நீங்க இணைய வாசியா இருந்தா கண்டிப்பா சுஹைல் பத்தி தெரியாம போக வாய்ப்பில்ல. பேமஸ் யூடியூபரான இவரு, சுஹைல் விலாகர், சைபர் தமிழான்ற யூடியூப் சேனல நடத்திகிட்டு வராரு. இவருக்கு சொந்த ஊரு கோவை. மனைவி பேரு பாபினா, 7 மாசத்துல ஓரு கொழந்தையும் இருக்கு.
நாலு மாசத்துக்கு முன்னாடிதான் கே.ஜி சாவடி பிச்சனூர் பகுதில வீட்டை வாங்கினாரு. சொந்த வீடு வாங்குன பூரிப்புல வீட்டு ஹால், பாத்ரூம், சமையல்கட்டெல்லாம் எங்கங்க இருக்குன்னு தெளிவா வீலாக் பண்ணி யூடியூப்ல அப்லோட் பண்ணிட்டாரு.
நமக்கு யூடியூப்ல செழிப்பான வருமானம். இப்போ வண்டி வீடுன்னு செட்லாயிட்டேன் அப்டின்னு யூடியூபர் சுஹைல் பெருமையாவேற சொல்லிட்டாரு….ஒரு வேலை வாய்ல சனி தோஷம் இருந்திருக்கலாம், இந்த நெலமைலதான், விடிய காலை 6 மணிக்கு சுஹைல் வீட்ட யாரோ தட்டிருக்காங்க.
கதவ திறந்த சுஹைல முகமுடி கொள்ளையன் ஒருத்தன் கத்திமுனைல மிரட்டிருக்கான். அதிர்ச்சியான சுஹைல் கைல முகமுடி கொள்ளையன்கிட்ட சண்டை போட்ருக்காரு, அந்த நேரத்துல அவரோட நண்பர் ஹரியும் வீட்டுக்கு வர. ரெண்டு பேருமா சேர்ந்து முகமுடி கொள்ளையனை கட்டிபோட்டு, போலீசுக்க தகவல் கொடுத்தவுடனே அவங்க வந்து விசாரணை பண்ணிருக்காங்க.
புதுச்சேரிய சேர்ந்த 25 வயசு அனுராம். சுஹைலோட வீலாக்கை பார்த்துட்டு கொள்ளையடிச்சா செட்டிலாயிடலாம்னு யோசிச்சு, புதுச்சேரில இருந்து கே.ஜி சாவடி பிச்சனூருக்க நடுராத்திரில வந்துட்டாரு. வீடு பூட்டிருக்கு, காலைல திருடிக்கலாம் அப்டின்னு சுஹைல் வீட்டு மாடில போயி தூங்கிட்டு காலைல 6 மணிக்கு தூங்கி எழுந்து புத்துணர்ச்சியோட திருடப் போயி மாட்டிக்கிட்டாரு. இப்போ முகமூடி கொள்ளையன் அனுராமை போலீஸ்க்காரங்க கோர்ட்ல ஆஜர்படுத்தி சிறைல அடைச்சிருக்காங்க. இது உச்சக்கட்டம் என்ன அப்டின்னா, இதையும் கூட நம்ம சுஹைல் விலாக் பண்ணி வெளியிட்ருக்காரு அப்டின்றதுதான்.
சமூகவலைதள வாசிகள் கொஞ்சமாவது ரகசிய பக்கங்களை பாதுகாத்து வைக்க வேண்டும். ஏன்னா, உங்களை பின் தொடர்பவர்களில் வில்லங்கமான சில ஆட்களும் இருக்கலாம்.
Discussion about this post