நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் சுமார் 63 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நேஷனல் ஜுடிசியல் டேட்டா கிரிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கறிஞர்களின் எதிர்பாராத உயிரிழப்புகள், போதிய வழக்கறிஞர்கள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் வழக்குகள் தேக்கம் அதிகளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேங்கியுள்ள 63 லட்சம் வழக்குகளில் சுமார் 77 புள்ளி 7% வழக்குகள் டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்தவை என்பது குறிப்பிடதக்கது.
Discussion about this post